சிக்கியது என்னென்ன..? தொடர்ந்து திமுக அமைச்சர்களை குறிவைக்கும் ED, IT!!

V. Senthil Balaji Tamil nadu DMK K. Ponmudy
By Karthick Nov 03, 2023 04:44 AM GMT
Report

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டு வருவது திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

அமைச்சர் எ.வ.வேலு 

திமுகவில் முக்கிய நபராக அமைச்சரவையில் இடம்பிடித்திருப்பவர் எ.வ.வேலு. தமிழக பொதுப்பணி துறை தற்போது அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமானவரி சோதனை நடைபெற்று வருகின்றது.

why-it-and-ed-is-targeting-dmk-ministers

சென்னை மற்றும் திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மட்டுமில்லாமல் அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுச்செயலாளர் பதவி; அதிகாரமேயில்லை, மல்லுக்கட்டும் சசிகலா - எடப்பாடி முடிவு என்ன?

பொதுச்செயலாளர் பதவி; அதிகாரமேயில்லை, மல்லுக்கட்டும் சசிகலா - எடப்பாடி முடிவு என்ன?

சிக்கியது என்ன..?

மேலும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் எ.வ.வேலு கவனித்து வரும் கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் போன்ற பிரிவுகளையும் சார்ந்த ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மாதம் முன்னாள் திமுக எம்பியுமான மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை.சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அப்போது சோதனையின் போது, ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதே போல கடந்த ஜூலை மாதம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அவர் தற்போது சிறையில் உள்ளார்.

why-it-and-ed-is-targeting-dmk-ministers

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட இலாகா இல்லாத அமைச்சர் இன்னும் சென்னை புழல் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, மூத்த அமைச்சரான பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கவுதம சிகாமணி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனையை தீவிரப்படுத்தியது. இந்த சோதனையில் , ரூ. 81.7 லட்சம் பணம், சுமார் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் (பிரிட்டிஷ் பவுண்டுகள்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.41.9 கோடி நிலையான வைப்பு நிதியும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.