பி.டி.ஆர் துறை மாற்ற இதுவே காரணம் - முதல் முறையாக சொன்ன முதலமைச்சர்..!
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்?] நிதி துறையில் இருந்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டது ஏன் என்பதற்கான காரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலவச WiFi
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடத்தப்படும் "Umagine TN" மாநாட்டை துவங்கி வைத்தார்.
CII எனப்படும் Confederation of Indian Industry கூட்டமைப்புடன் இணைந்து நடைபெறும் இம்மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆழ்நிலைத் தொழில்நுட்பம் (Deep Tech), இணையப் பாதுகாப்பு (Cyber Security), போன்ற முக்கியப் தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறுகிறது.
மாற்ற காரணம்
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதித்துறையை போலவே ஐ.டி. துறையும் மேம்படவே அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை அத்துறைக்கு மாற்றியதாக குறிப்பிட்டு, நிதி அமைச்சராக அவர் சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர் என்று புகழாரம் சூட்டினார்.
DMK files வெளியான புதிதில் முதலில் பாஜகவின் அண்ணாமலையால் குறிவைக்கப்பட்டவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தான்.
தற்போதைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் குறித்து பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோக்கள் வைரலான சில காலத்திலேயே அவர் பொறுப்பு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது