ஆடியோ விவகாரம் சர்ச்சை : முதலமைச்சர் ஸ்டாலின் , நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

M K Stalin DMK Palanivel Thiagarajan
By Irumporai May 01, 2023 05:52 AM GMT
Report

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்தார்.

முதலமைச்சருடன் சந்திப்பு

சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இன்று அவரை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து உள்ளார். பல்வேறு அரசியல் நகர்வுகள் முக்கியமாக, பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ விவகாரத்திற்கு பிறகான இந்த சந்திப்பு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஆடியோ விவகாரம்

பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஆடியோ வெளியிட்டார். அதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி மற்றும் சபரீசன் பற்றி பேசியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த ஆடியோ சித்தரிக்கப்பட்டது என பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு விளக்கம் அளித்து இருந்தார். இந்த ஆடியோ வெளியான பிறகு ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலினை , பழனிவேல் தியாகாஜன் சந்தித்து இருந்தார். தற்போது இன்று இரண்டாவது முறையாக சந்தித்து உள்ளார்.

ஆடியோ விவகாரம் சர்ச்சை : முதலமைச்சர் ஸ்டாலின் , நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு | Minister Palanivel Thiagarajan Meet Cm Stalin

நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையில் ஏதேனும் மற்றம் வருமா என எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுத்திறது. ஆனால், இது வழக்கமாக நடைபெறும் சந்திப்பு தான் அமைச்சர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அலுவல் சம்பந்தமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் நிதியமைச்சர் என்கிற முறையில் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார் என கூறப்பட்டுள்ளது.