ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகாதது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்
ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கது குறித்து அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 T20 போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரை இலங்கையுடன் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி ஜூலை 27 முதல் இலங்கையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், நடந்து முடிந்த T20 உலக கோப்பையை வென்ற கையோடு சர்வதேச T20 போட்டிகளில் ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா. அவர் ஓய்வுபெற்ற நிலையில், துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ்
இந்த தொடரின் T20 போட்டிகளுக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவே தொடர்கிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் அகர்கர் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கதாதது குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் இது குறித்து விளக்கமளிக்க தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். இதில் அஜித் அகர்கர் பேசிய போது ”ஹார்திக் பாண்டியா மிக முக்கியமான வீரர் என்பதை நாம் உலகக் கோப்பையிலேயே பார்த்துள்ளோம். அணிக்கு அவர் தேவை தான் என்றாலும், அவரின் உடல்தகுதி பெரும் சவாலாக உள்ளது. அனைத்து சூழல்களிலும் விளையாடக் கூடிய கேப்டன் தான் அணிக்கு தேவை.
ஹார்திக் பாண்டியா அணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கிறார். இந்த முடிவு வீரர்களிடம் இருந்தும் பொதுவான கருத்துகளை பெற்றே எடுக்கப்பட்டுள்ளது
மேலும் சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன். அவர் அனைத்து விதமான தொடர்களிலும் விளையாடுகிறார். கேப்டனுக்கு தேவையான அனைத்து திறமைகளும் அவரிடம் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.