சானியா மிர்சாவுடன் திருமணம்? மவுனம் களைத்த முகமது ஷமி
சானியா மிர்சாவை திருமண செய்ய உள்ளதாக வரும் செய்திகளுக்கு முகமது ஷமி பதிலளித்துள்ளார்.
முகமது ஷமி
2013 ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் முகமது ஷமி. தற்போது காயம் காரணமாக கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகியுள்ளார். 2018 ம் தனது மனைவி ஹசின் ஜஹானிடமிருந்து விவாகரத்து பெற்றார். இவர் இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை இவர் திருமணம் செய்ய உள்ளதாக அவ்வபோது தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது.
2010 ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்ட சானியா மிர்சா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் விவாகரத்து பெற்றார். இதைத்தொடர்ந்து மூன்றாவது திருமணமும் செய்துள்ளார் சோயிப் மாலிக். ஆனால், சானியா மிர்சா தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
புகைப்படங்கள்
சமீபத்தில், சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி திருமண நிச்சயத்தார்த்த புகைப்படங்கள் என்ற பெயரில் இவர்கள் இணைந்து உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. பின்னர் அது போலியாக தயாரிக்கப்பட்ட படம் எனக் கண்டறியப்பட்டது. ஏற்கனவே இருவருக்கும் திருமணமானதாக புகைப்படங்கள் வைரலாகின.
அதற்கு மறுப்பு தெரிவித்த சானியா மிர்சாவின் தந்தை இம்ரான், “இதில், துளியளவும் உண்மை இல்லை. இது ஒரு குப்பையான செய்தி. சானியாவை முகம்மது ஷமி இதுவரை சந்தித்ததுகூட இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
ஆதாரமற்ற விசயம்
தற்போது ஒரு நேர்காணலில் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முகமது ஷமி, சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தும் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற விசயங்களைப் பரப்பக்கூடாது. இந்தச் செய்தி மிகவும் விஷமத்தனமானது.
என்னுடைய மொபைல் போனை திறந்தாலே சானியா மிர்சாவை நான் திருமணம் செய்துகொள்ள போவதாக பலரும் பகிரும் மீம்ஸ் தான் வருகிறது. மீம்ஸ் என்பது அனைவரும் சந்தோஷமாக இருப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அதுவே ஒருவர் வாழ்க்கையைக் கெடுக்கும் என்றால் நிச்சயம் அதைப்பற்றி யோசியுங்கள்.
மேலும் அதிகாரப்பூர்வமற்ற பக்கங்களில் இருந்து இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகிறது. உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்களுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து செய்தியை பகிருங்கள். அப்படிச் செய்தால் நிச்சயம் அதற்கு பதில் அளிப்பேன் அதை விட்டு இது போன்ற விஷயம் எல்லாம் செய்யாதீர்கள்” என பேசியுள்ளார்.