கார் ரேஸுக்கு ஒரே நாளில் அனுமதி..விஜய்யின் மாநாட்டை பார்த்து ஏன் பயம்? தமிழிசை தாக்கு!
விஜய்யின் மாநாட்டை பார்த்து ஏன் இவ்வாவு பயம்? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழிசை தாக்கு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பிறகு தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “கார் ரேஸ் நடத்த ஒரே நாளில் அனுமதி பெற முடிகிறது. ஆனால் விஜய் கட்சி மாநாட்டிற்கு அனுமதி தருவதில் என்ன தாமதம்?
விஜய் மாநாடு
த.வெ.க மாநாட்டிற்கு இடம் கொடுப்பதில் ஏன் இவ்வளவு பயம்? விஜய் மாநாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றே தாமதம் செய்க்றார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டு மாநாட்டிற்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.
விஜய்யின் கட்சியையும் தடுக்கிறார்கள். அவரது படத்தின் காட்சிக்கும் தடை விதிக்கிறார்கள். விஜய்க்கு ஆதரவாக எல்லாம் பேசவில்லை. ஆனால் ஒரு புதிய கட்சி வந்தால் என்ன? மக்கள் யாருக்கு தருகிறார்களோ தரட்டும். ஆனால் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.என்று தெரிவித்துள்ளார்.