கருப்பு நிறத்தில் மாறிய மணல் - சென்னை ECR-ரில் பரபரப்பு!
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை கடற்கரைகளில் மணல் கருப்பு நிறத்தில் மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
கிழக்குக் கடற்கரைச் சாலை சுமார் 777 கி.மீ நீளம் கொண்டவை .இங்கு தான் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள், ஆன்மிகத் தலங்கள் அதிக அளவில் உள்ளனர்.
மேலும் பனையூர், உத்தண்டி, அக்கரை,நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடற்கரைக்குத்தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் வந்து இயற்கை அழகை ரசித்துவிட்டுச் செல்கின்றனர் .
இந்த நிலையில் பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் உள்ள மணல் பரப்பு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகத் திடீரெனக் கருப்பு நிறத்தில் மாறி காணப்படுகிறது. மேலும் மணல் பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் கருப்பாகவே காணப்படுகிறது.
மணற்பரப்பு
இதுகுறித்து மீனவர்கள் சிலர் கூறுகையில் கடற்கரை மணற்பரப்பு பொதுவாகப் பழுப்பு, வெள்ளை , கருப்பு, மஞ்சள் எனப் பல வண்ணங்களில் அடுக்குகளாக இருக்கும்.
இவை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் போது கடற்கரையின் மணற்பரப்பின் மேல் அடுக்கில் உள்ள வெள்ளை நிற மணல், அரிப்பு ஏற்பட்டு அடியில் உள்ள கருப்பு மணல் வெளிப்படுத்தும். எனவே இதைக் கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளனர்.