கார், பைக்கை நாய்கள் ஏன் துரத்துகிறது தெரியுமா? பலரும் அறியாத தகவல்!
கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகிறது என்பதை தெரிந்துக் கொள்வோம்.
துரத்தும் நாய்கள்
நாய்கள் கார்களின் பின்னால் பல நேரங்களில் ஓடுவதை பார்க்க முடியும். ஏனென்றால், காரில் நாய்கள் சிறுநீர் கழிப்பதை பார்த்திருப்போம்.
அந்த நிலையில், வாகனம் சாலை வழியாக செல்லும் போதெல்லாம், அப்பகுதியில் உள்ள நாய்கள் உங்கள் டயரில் வாசனை வீசும் மற்றொரு நாயின் வாசனையை உணரும். இந்த வாசனையால், நாய்கள் காருக்குப் பின்னால் குரைக்கும்.
என்ன காரணம்?
தெருக்களுக்கு புதிதாக நாய் வரும்போதெல்லாம், அதை விரட்ட நினைக்கும். தங்கள் பகுதியில் மற்ற நாய்களைப் பார்க்க விரும்புவதில்லை.
நாய்களின் வாசனை ஒருகாரணம் என்றாலும், அதிவேகம், வித்தியாசமான ஒலி எழுப்பியவாறு வாகனம் செல்லுதல் போன்ற வேறு சில காரணங்களும் நாய் துரத்த காரணமாக அமைகின்றன.
மேலும், நாய்கள் வேட்டையாடும் விலங்கு என்பதால் நகரும் வாகனங்கள் சில நேரங்களில் ஓடும் இரை போல நினைக்கத் தூண்டுகின்றன. அதுவும் நாய்கள் துரத்த காரணமாக அமைவது குறிப்பிடத்தக்கது.