பாம்பு கடிச்சதும் இதை மட்டும் பண்ணிராதீங்க; என்ன செய்யலாம் - வனச்சரகர் வீடியோ!
பாம்புகள் கடித்தால் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது எனத் தெரிந்துக்கொள்வோம்.
பாம்பு கடி
சத்தியமங்கலம் வனச்சரகர் சதீஷ் நிர்மல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாம்பு கடித்துவிட்டால் முதலில் நாம் பதற்றமடைய கூடாது. அதிகமாக பதற்றமடைந்தால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
இதனால் விஷம் உடல் முழுவதும் வேகமாக பரவும் வாய்ப்புள்ளது. பாம்பு கடித்தவர்களை எந்த விதமான பதற்றமான சூழலுக்கும் உள்ளாக்கக் கூடாது. பாம்புகள் கால்களிலும் கைகளிலும் அதிகமாக கடிக்கும்.
நெறிமுறைகள்
அவ்வாறு கடிக்கும் போது பெண்கள் காலில் உள்ள மெட்டியையும் மோதிரத்தையும் நீக்கிவிட வேண்டும். ஏனென்றால் பாம்பு கடித்ததும் அந்த பகுதியில் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பாம்புக் கடித்த இடத்தில் குளிர்ச்சியான பொருட்களை வைக்கக் கூடாது. மருத்துவர்களும் இதை பரிந்துரைப்பதில்லை.
சோப்பு போட்டும் கழுவக் கூடாது. திரைப்படங்களில் பார்ப்பது போல் பாம்பு கடித்தவுடன் விஷத்தை உறிஞ்சு எடுத்தல் கூடாது. அது உறியக் கூடிய நபரின் உயிருக்கும் ஆபத்தை கொடுக்கும். பாம்பு கடித்த இடத்திற்கு 2 இன்ச் தள்ளி கட்டு போட வேண்டும்.
பாம்பு கடித்தவர்களுக்கு தண்ணீரும் உணவு கொடுக்க கூடாது. பாம்பு கடித்தவர்கள் நடந்தோ ஓடியோ மருத்துவமனைக்கு செல்லக் கூடாது. அவரை அமைதிப்படுத்தி இரு சக்கர வாகனமோ 4 சக்கர வாகனமோ இருந்தால் அதில் அமர வைத்து அழைத்துச் செல்லலாம்.

2 மாதங்களில் 9 முறை கடி; சிறுவனை விடாமல் துரத்தும் பாம்பு - என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே வாழும் குடும்பம்!
பாம்பு கடித்ததை கூட மறந்துவிட்டு அந்த பாம்பை பிடித்து அடித்து கொன்று அதை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற கதையெல்லாம் உண்டு. இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விஷயம்.
அதை தவிர்க்கலாம்.
பாம்பு ஒரு வீட்டில் நுழைந்துவிட்டால் வனத்துறை, தீயணைப்புத் துறை, பாம்பு பிடிக்கும் தன்னார்வலர்களை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.