தலைமை பயிற்சியாளர் - ஏன் தோனியை ஒதுக்குகிறது BCCI? அதிர்ச்சி ரிப்போர்ட்
தோனி
உலக கிரிக்கெட் அரங்கில் பிரபலமான ஒருவராக நீடிக்கிறார் தோனி. தோனி இளம் இந்திய அணி உலகக்கோப்பை டி20 கோப்பையை தனதாக்கிய போது தான் தோனி என்ற ஒரு தலைவர் உருவானார். அப்போது இந்திய அணியின் தலைமை நிர்வாகம் கூட கோப்பையை வெல்வோம் என நம்பவில்லை.
அவ்வளவு ஏன், இறுதிப்போட்டிக்கு ஒரு நாள் மும்பு கூட இந்திய அணி வெல்லுமா? என்ற கருத்து குறித்து ரவி சாஸ்திரி தெரிவித்த கருத்துக்கள் இன்று வரை பிரபலமே. அப்படி நெருக்கடியான நேரத்தில் துவங்கிய தோனி என்ற legacy உலகக்கோப்பை ஒருநாள் கோப்பை, டெஸ்டில் முதல் அணி, சாம்பியன்ஸ் லீக் என ICC'யின் அனைத்து கோப்பைகளை வென்று விட்டார்.
உலக அரங்கில் இன்னும் அவரின் சாதனையை யாரும் நெருங்ககூட முடியாத நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஏன் தோனி பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.
ஏன் இல்லை
அதனை தடுக்க முக்கிய காரணமும் தோனி தான். தலைமை பயிற்சியாளராகும் ஒருவர், அனைத்து வகை கிரிக்கெட் விளையாட்டில் இருந்தும் ஓய்வு பெறுவது அவசியமாகும். ஆனால், தோனி இன்னும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றார். அது தான் முதல் முக்கிய காரணமாகும். அவர் ஓய்வு பெற்ற பிறகு முதல் நபராக பரிசீலிக்கப்படுபவராக தோனி தான் இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அதே போல, ஒரு முறை mentor'ஆகா செயல்பாட்டிற்கும் அனுபவமும் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2021 டி 20 உலகக் கோப்பையின் போது தோனி தான் இந்திய அணிக்கு mentor'ஆகா இருந்தார் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அப்போது, குரூப் ஸ்டேஜிலேயே இந்தியா வெளியேறியதும் இதில் குறிப்பிடத்தக்கது.