இந்தியா தலைமை பயிற்சியாளர் நியமனம் - இது தான் ஒரே வழி!! தோனியிடம் சென்ற பிசிசிஐ

MS Dhoni Indian Cricket Team Board of Control for Cricket in India
By Karthick May 21, 2024 09:47 AM GMT
Report

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பிசிசிஐ அமைப்புடன் மேற்கொண்ட ஒப்பந்தம் வரும் 2024 டி20 உலக கோப்பை தொடருடன் நிறைவடைகிறது. டி20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் 1-ஆம் தேதி துவங்கி ஜூன் 29'இல் நிறைவடைகிறது.

BCCI Jay Shah

அந்த தொடருக்கு அடுத்ததாக இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவுள்ளார் என்றும் அதற்கான அறிவிப்பும் அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஸ்டிபன் ஃபிளேமிங் பெயர் அதிகளவில் அடிபடுவதாக கூறப்படுகிறது.

இதெல்லாம் முக்கியமில்லை...நேரில் வந்த விராட் - சுருக்கென சொன்ன தோனி!!

இதெல்லாம் முக்கியமில்லை...நேரில் வந்த விராட் - சுருக்கென சொன்ன தோனி!!

சென்னை அணிக்காக 2008-ஆம் ஆண்டு முதல் பயிற்சியாளராக இருக்கும் அவர், அணியை சிறப்பாக - கட்டுக்கோப்பாக வழி நடத்தியுள்ளார். அதன் காரணமாகவே அவரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அவரை அணுகிய போதிலும் அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

தோனிக்காக காத்திருக்கும் 

இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித், விராட், அஸ்வின் போன்றவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் ஒய்வு பெறலாம். அப்போது இளம் இந்திய அணியே இருக்கும்.

Dhoni and Stephen Flemming

அப்போது அவர்களுக்கு பெரிய அனுபவம் வேண்டுமென்ற காரணத்தால், ஸ்டிபன் ஃபிளேமிங் அணுகப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இது வரை ஸ்டிபன் ஃபிளேமிங் தரப்பில் இருந்து இதற்கு பாசிட்டிவான பதில் கிடைதிரவில்லை.

Stephen Flemming

இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனியை வைத்து பிசிசிஐ முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. தோனி - ஸ்டிபன் ஃபிளேமிங் இருவருக்கும் மத்தியில் நல்லுறவு இருப்பதால், அணியின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தோனியிடம் பிசிசிஐ பேசியுள்ளதாக கூறப்படுகிறது.