இதெல்லாம் முக்கியமில்லை...நேரில் வந்த விராட் - சுருக்கென சொன்ன தோனி!!
சென்னை அணியை தோற்கடித்ததை பெங்களூரு அணி வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடினார்கள். மைதானத்திலேயே சிறிது நேரம் ஆர்சிபி வீரர்கள் கொண்டாடிய நிலையில், தோனி கைகுலுக்காமல் திரும்பி சென்றது பெரும் வைரலானது.
இது தொடர்பாக சென்னை அணி ரசிகர்கள் தோனிக்கு ஆதரவாகவும், பெங்களூரு அணி வீரர்கள் விராட் கோலிக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
பெரும் விவாத பொருளாக இந்த சம்பவம் மாறியுள்ளது.
தோனியின் கடைசி ஆட்டம் இது என்றால், இவ்வாறு நடந்து கொண்டதை நினைத்து ஆர்சிபி வீரர்கள் பெரிதாக வருந்துவார்கள் என பல முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக சாடி வருகிறார்கள். இந்த சூழலில் தான், விராட் கோலி தோனியை Dressing ரூமிற்கு நேராக வந்து சந்தித்து பேசியுள்ளார்.
அவர்கள் பேசியது இது தான் என்ற கருத்தும் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதாவது, இந்த வெற்றியை விட கோப்பை தான் முக்கியம், இந்த போட்டியில் விளையாடியதை போலவே பைனலிலும் விளையாடணும் என தோனி விராட்டிடம் கூறியதாக தகவல் பரவி வருகிறது.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், சக வீரராக தோனி நிச்சயமாக விராட்டிற்கு அறிவுரை வழங்கியிருப்பார் என்றே பலரும் பேச துவங்கியுள்ளார்கள். தோனிக்கு அவமரியாதை செய்ததாக தகவல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், விராட் இது குறித்து பேசவில்லை என்பதே உண்மை.