ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி விமானமா? இவ்வளவு காஸ்ட்லியான நகரம் எங்கே இருக்கு தெரியுமா?

United States of America Flight Cameroon
By Swetha Mar 11, 2024 08:03 AM GMT
Report

ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி விமானம் கொண்ட ஒரு குட்டி நகரத்தை குறித்து இந்த பதிவில் காணலாம்.

காஸ்ட்லி நகரம்

அமேரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இருக்கும் கேமரான் ஏர்பார்க் என்ற சிறிய நகரத்தில் உள்ள மக்கள் அவர்களது அலுவலகத்திற்கு செல்ல ஒவ்வொரு வீட்டிலும் விமானத்தை வைத்துள்ளனர்.

ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி விமானமா? இவ்வளவு காஸ்ட்லியான நகரம் எங்கே இருக்கு தெரியுமா? | Why Cameron City Resident Owns An Aircraft

ஏனெனில், இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் விமான ஓட்டிகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய தெரிந்தவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளாக இருக்கின்றனர்.

இவர்களுடன் ஒரு சில மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற மக்களும் வசிக்கிறார்கள். 

take-off ஆன விமானம்; திடீரென கழன்று விழுந்த டயர்..பதறிய பயணிகள் - வைரலாகும் வீடியோ!

take-off ஆன விமானம்; திடீரென கழன்று விழுந்த டயர்..பதறிய பயணிகள் - வைரலாகும் வீடியோ!

எங்க தெரியுமா?

எனவே, இங்கு வசிக்கும் அனைவரும் தாங்கள் சொந்தமாக விமானங்களை வைத்திருப்பதை விரும்புகிறார்கள்.

ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி விமானமா? இவ்வளவு காஸ்ட்லியான நகரம் எங்கே இருக்கு தெரியுமா? | Why Cameron City Resident Owns An Aircraft

கடந்த 1963 இல் கட்டப்பட்ட இந்த கமரூன் ஏர்பார்கில் மொத்தம் 124 வீடுகள் கொண்டுள்ளது. விமானங்களை தங்கள் வீடுகளுக்கு முன்பாக தரையிறங்க மற்றும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு எளிதாக செல்லவும் வசதியாக இங்கு 100 அடி அகலத்திற்கு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி விமானமா? இவ்வளவு காஸ்ட்லியான நகரம் எங்கே இருக்கு தெரியுமா? | Why Cameron City Resident Owns An Aircraft

இந்த நகரத்தில் உள்ள உள்ள வீதிகளின் பெயர்கள் கூட விமானங்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா விமானங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, இந்த நிலையத்தை ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு பூங்காவாக மேம்படுத்த

அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்தது. அதன் காரணமாக தான் காமரூன் ஏர்பார்க் நகரத்தில் வீட்டுக்கு ஒரு விமானம் நிற்கிறது.