திடீரென ட்ரெண்டாகும் #BoycottA2B!! அடையார் ஆனந்த பவன் விவகாரம்!! இது தான் காரணமா?
சமூகவலைத்தளங்களில் #BoycottA2B அதாவது அடையார் ஆனந்த பவன் உணவகத்தை புறக்கணிப்போம் என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வரும் காரணத்தை தற்போது காணலாம்.
அடையார் ஆனந்த பவன்
தமிழகத்தின் முன்னணி சைவ உணவகங்களில் ஒன்று அடையார் ஆனந்த பவன். சென்னையின் பல பகுதிகளில் இருக்கும் இந்த கடையில் தினமும் உணவருந்துவதை விரும்பும் உணவு பிரியர்கள் ஏராளம்.
காரணம் சைவ உணவகமான இதில் வழங்கப்படும் உணவின் சுவை தான். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல இடங்களிலும் காணப்படும் இந்த கடை, தொடர்ந்து தமிழகத்தின் ஒரு அடையாளமாகவே மாறியுள்ளது எனலாம்.
காரணமான பேட்டி
இந்நிலையில், இக்கடை புறக்கணிக்கக்கோரி #BoycottA2B என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. அதற்கு காரணம் இந்த உணவகத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாச ராஜா அளித்த சமீபத்திய பேட்டி தான்.
அந்த பேட்டியில், நெறியாளர் "ஒரு காலத்தில் சைவ உணவக தொழில் ஐயர்களின் கையில் தான் பெரும்பாலும் இருந்தது.ஆனால் மெல்ல மெல்ல எப்படி மாறுதல் ஏற்பட்டது என வினவினார்.
அதற்கு பதிலளித்த ஸ்ரீனிவாச ராஜா, யார் வேண்டுமானாலும் எந்த தொழிலையும் செய்யலாம் என்ற நிலைக்கு முக்கிய காரணம் தந்தை பெரியார் தான் என கூறி, அவர் தான் குலத் தொழிலை மாற்றிக்காட்டியவர் என்று அந்த வீடியோவில் பேசினார்.
Thank you for speaking the truth. #WillEatAtA2B pic.twitter.com/kysnJYsHLr
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 21, 2023
இந்த பேட்டி வைரலான நிலையில், இந்துத்துவ ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்து இந்த ஹாஷ்டேக்கை தற்போது ட்ரெண்டாக்கி உள்ளனர். இந்நிலையில், எதிர்பாரா விதமாக கனிமொழி எம்.பி, இந்த வீடியோவை பதிவிட்டு, உண்மையை பேசியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.