ஓய்ந்த பாஜக - கர்நாடகா தேர்தல் தோல்விக்கு இதுதான் காரணமா?
பாஜக அதன் வசம் இருந்த ஒரே தென் மாநிலத்தையும் இழந்துள்ளது.
பாஜக தோல்வி
பாஜகவை போல் அல்லாமல், காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் முக்கிய தலைவர்களையே தேர்தல் வெற்றிக்காக நம்பியது. ஆனால் பாஜக பிரதமர், மத்திய அமைச்சர்கள் என வெளியூர் நபர்களை பரப்புரையின் போது பிரதானப்படுத்தியது.
லிங்காயத்துக்களின் முகமாக பார்க்கப்படும் எடியூரப்பா, தேர்தல் அரசியலில் இருந்து விலகி விட்டார். இதே போல் பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் சவடி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும் லிங்காயத்து சமூக மக்களின் வாக்குகள் காங்கிரஸ் பெற வாய்ப்பாக அமைந்தது.
காரணம்?
பெண்களின் வாக்குகளை கவர காங்கிரஸ் ஏராளமான திட்டங்களை அறிவித்திருந்தது. பெண்களுக்கு மாதம்தோறும் 2 ஆயிரம் ரூபாய், 200 யூனிட் இலவச மின்சாரம் என அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் சாதகமான முடிவை அளித்துள்ளன.
முதலமைச்சர் பொம்மை மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பாஜகவின் பிம்பத்தை உடைத்தது. பாஜக வேட்பாளர்கள் தேர்வு, முழுக்க முழுக்க தேசிய தலைவர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் உள்ளூர் அரசியலை புரிந்து கொள்ளாமல் வேட்பாளர்களை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.