பாஜக தான் ஆட்சி அமைக்க வேண்டும் - 1008 தாமரை பூ வைத்து நடிகை நமீதா சிறப்பு பூஜை!

Namitha Karnataka
By Vinothini May 11, 2023 10:22 AM GMT
Report

கர்நாடகா தேர்தலில் பாஜக கட்சி வெற்றிபெற வேண்டும் என நடிகை நமீதா சிறப்பு பூஜை செய்துள்ளார்.

நடிகை நமீதா

பிரபல நடிகை நமீதா, பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழகத்தில் பாஜக தலைவராக எல்.முருகன் இருந்த போது நடிகை நமீதா பாஜகவில் இணைந்தார்.

actress-namitha-talks-about-karnataka-election

பின்னர், சில மாதங்கள் பரபரப்பாக கட்சிப் பணியாற்றி வந்தார். தொடர்ந்து, எல். முருகன் மாற்றப்பட்டதால் சில காலம் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

பிறகு, பாஜக செயற்குழு உறுப்பினர் பதவியில் மட்டும் அவர் தொடர்ந்து வந்த நிலையில் மீண்டும் இப்போது பரபரப்பாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்.

சிறப்பு பூஜை

இந்நிலையில், இவர் கர்நாடகா தேர்தல் நடைபெற்றபொழுது பாஜக வேட்பாளர் சார்பாக பிரச்சாரத்தில் மேற்கொண்டார்.

தற்போது அவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கபாலீஸ்வரர் கோயில் 1008 தாமரை பூக்களால் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்தார்.

actress-namitha-talks-about-karnataka-election

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் என்னுடைய குழந்தையுடன் கொண்டாடுகிறேன். கர்நாடகாவின் பெங்களூருவில் நான் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டேன்.

கர்நாடகா மக்கள் பாஜகவிற்கு உற்சாகமான வரவேற்பை அளிக்கின்றனர். அதனால் இந்தத் தேர்தலில் தனிப்பெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதுவே எனது வேண்டுதலாக இருந்தது.

அண்ணாமலை சிங்கத்தைப்போல செயல்படுகிறார். அவர் வருகைக்கு பிறகு பாஜக புத்துணர்வு பெற்றுள்ளது. என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருவோரம் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு அளிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுடைய அன்பும் வாழ்த்துகளும் எனக்கு போதுமானது’’ என்று கூறினார்.