நான் அம்மாவாக போகிறேன்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை நமீதா

Namitha Bigg Boss
By Petchi Avudaiappan May 10, 2022 06:48 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகை நமீதா தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.  

கடந்த 2004 ஆம் ஆண்டு, நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகை நமீதா அறிமுகமானார். தனது முதக் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் 90’ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

விஜய், அஜித், விஜயகாந்த், சரத்குமார்,சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நிலையில் மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக நமீதா கலந்துக் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு காதலர் வீரேந்திர செளத்ரி என்பவரை மணந்துக் கொண்டார்.  இந்நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது பிறந்தநாளில் தெரிவித்துள்ளார் நமீதா. அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ”தாய்மை... புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, ​​புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன். உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால்  உணர முடிகிறது” என நமீதா குறிப்பிட்டுள்ளார்.