ஆதரவு மட்டுமே - 2 வடகிழக்கு மாநிலங்களில் போட்டியிடாத பாஜக...மணிப்பூர் கலவரம் எதிரொலியா?

BJP India Lok Sabha Election 2024
By Karthick Apr 15, 2024 06:02 PM GMT
Report

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் இன்றளவும் தேசிய தேர்தல் அரசியலில் அழுத்தமாக எதிரொலித்து வருகின்றது.

மணிப்பூர் கலவரம்

மெய்தேய் சமூகத்தினருக்கு அதிகாரப்பூர்வ பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக உருவான கலவரம் வடகிழக்கு மாநிலங்களில் வசித்து வரும் மெய்தேய்,குக்கி, நாகா இன மக்களுக்கிடையே பெரும் கலவரமாக மாறியது.

why-bjp-is-not-contesting-in-north-east-states

பலர் கொல்லப்பட்ட நிலையில், பல இடங்களில் பாலியல் ரீதியிலான கொடுமைகளும் நடந்தன. இதில், உச்சபட்சமாக 2 பெண்கள் பொதுவெளியில் நிர்வாணப்படுத்தப்பட்டு சம்பவம்.

why-bjp-is-not-contesting-in-north-east-states

நாடே கொதித்து போன இந்த சம்பவத்தில் மத்திய பாஜக அரசு தோற்றுவிட்டதாக பலரும் குற்றம்சாட்டுகிறார்கள். பல மாநிலங்களில் இருந்தும் பெரும் கண்டனங்கள் மத்திய அரசுக்கு வைக்கப்பட்டது.

மோடி கேரண்டி - பாஜக தேர்தல் வாக்குறுதி வெளியீடு - இவ்வளவு சிறப்பு திட்டங்களா?

மோடி கேரண்டி - பாஜக தேர்தல் வாக்குறுதி வெளியீடு - இவ்வளவு சிறப்பு திட்டங்களா?

போட்டியில்லை...

இந்த கலவரத்தின் வெளிப்பாடு தேர்தலிலும் அழுத்தமாக எதிரொலிக்கிறது. வடகிழக்கு இந்தியாவில் 7 மாநிலங்கள் உள்ளன. மணிப்பூர், சிக்கிம், நாகலாந்து, அசாம், ஹிமாச்சல பிரதேசம், மேகாலயா மற்றும் திரிபுரா. இவற்றில் மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் கூட்டணி கட்சிக்கு ஆதரவை அளித்து தேர்தலில் போட்டியிடாமல் உள்ளது பாஜக.

why-bjp-is-not-contesting-in-north-east-states

மணிப்பூரில் இன்னர் மற்றும் அவுடர் மணிப்பூர் என 2 தொகுதிகள் உள்ளன.மேகாலயாவில் ஷில்லாங் மற்றும் துரா என இரண்டு தனி தொகுதிகள் உள்ளன. நாகலாந்தில் நாகலாந்து என்ற ஒரே ஒரு தொகுதி உள்ளது.

why-bjp-is-not-contesting-in-north-east-states

மணிப்பூரில் இன்னர் மணிப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக, அவுடர் மணிப்பூர் தொகுதியில் நாகாலாந்து மக்கள் முன்னணி(Nagaland People Front) என்ற கட்சிக்கும், மேகாலயாவில் போட்டியிடாமல் தேசிய மக்கள் கட்சி (National People's Party) என்ற கட்சிக்கும், நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (Nationalist Democratic Progressive Party) என்ற கட்சிக்கும் ஆதரவை அளித்துள்ளது.