கட்சி தலைவர் to பாஜக உறுப்பினர்...ஏன் இந்த முடிவு? உண்மையை உடைத்த சரத்குமார்!
கட்சி தலைவரில் இருந்து சாதாரண உறுப்பினர் ஆனது குறித்து சரத்குமார் விளக்கமளித்துள்ளார்.
பாஜக உறுப்பினர்..
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்தவர் சரத்குமார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் சரத்குமார் கட்சி வெற்றி பெற்றது.
அதன்பிறகு அவரது கட்சி கட்சி தேர்தல்களில் தொடர் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு முன்பு சரத்குமார் தனது கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைவதாக அறிவித்தார்.
தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் சரத்குமார் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது தான் பாஜகவில் இணைந்தது ஏன் என்பது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
உடைத்த சரத்குமார்
அதாவது, நான் 1996 ஆம் ஆண்டு முதல் தேர்தல் களத்தை சந்தித்து வருகிறேன். 16 ஆண்டு காலம் சமத்துவ மக்கள் கட்சியை வழிநடத்தி இருக்கிறேன். காலத்தின் கட்டாயம் அப்படி சொல்லும் போது, இந்த முடிவை எடுத்தோம். நாடு வல்லரசாக உருவாகிக்கொண்டு இருக்கிறது.
நாடு வல்லரசு ஆவதற்கு நாமும் ஏன் கை கொடுக்க கூடாது என்று தான் பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கும் நாம் முதல் இடத்திற்கு வருவதற்கு, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாரத தேசத்தை
முதன்மை நாடாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் என் இயக்கத்தை பாஜகவோடு இணைத்திருக்கிறேன். இப்போது சாதாரண உறுப்பினராக இருக்கின்றேன். ஒரு கட்சியின் தலைவராக இருந்துவிட்டு தற்போது பாஜகவில் சாதாரண உறுப்பினராக இருக்கிறேன் என்றால்
இந்த கட்சியின் மீது, பாஜகவின் மீது, பிரதமர் மோடியின் மீது நம்பிக்கை வைத்திருப்பதால் தான் நான் இப்படிப்பட்ட முடிவை எடுத்து இருக்கிறேன் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.