இறந்த பிறகு ஏன் உடலை தனியாக விடக்கூடாது? கருட புராணம் கூறும் ரகசியங்கள் - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
இறந்த பிறகு ஏன் உடலைத் தனியாக விடக்கூடாது என்பது குறித்து கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள தகவல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இறந்தவர் உடல்
இறந்தவர்களைக் கவனிப்பது தங்கள் கடமை என்று இந்து குடும்பங்கள் கருதுகின்றனர். இறக்கும் நோயாளிகளுக்குக் கவனத்தையும் அன்பையும் அளிக்கின்றனர்.
ஒருவர் இறக்கும் போது, அவர்களின் உடலைத் தனியாக விடக்கூடாது குறித்து கருட புராணத்தில் பல ஆச்சர்ய தகவல்கள் தெரிவித்துள்ளது.அதன்படி ,இறந்த உடலை தையாக விட்டால், எதிர்மறை சக்திகள் அதாவது பேய்கள் அதை தங்கள் வசப்படுத்த முயற்சிக்கும்.
ஒரு மனிதன் இறந்த பின் முதல் ஒன்பது நாட்கள் அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு மிக அருகிலேயே ஆன்மாக்கள் உலாவும். இறந்தவர்களின் ஆன்மா உடலைச் சுற்றித் தான் இருக்கும்.
ஆச்சர்ய தகவல்
குடும்பத்தினர் துக்கத்தைப் பார்த்து அது மீண்டும் உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். அப்படி இறந்தவரின் உடலைத் தனியாக விட்டால் வாசத்திற்காகப் பூச்சிகள் மற்றும் பிற விலங்குகள் வரும் அபாயம் உள்ளது. இந்த பூச்சிகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.
சிலர் இறந்த உடலின் முடியைத் தந்திரத்திற்காகப் பயன்படுத்துகின்றனர். இதனால் இறந்தவரின் ஆன்மாவுக்கு மோட்சம் கிடைக்காது. மேலும் உடலை நீண்ட நேரம் வைத்திருந்தால், பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் வளர ஆரம்பிக்கும். அது மட்டுமல்லாமல் ஈக்களும் பறக்க ஆரம்பிக்கும்.