திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் பெண் அமைச்சர் - யார் இந்த நிலோஃபர் கபில்?
அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் திமுகவில் இணைந்துள்ளார்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

கடந்த மாதம் அதிமுக முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், இன்று முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோஃபர் கபில் திமுகவில் இணைந்துள்ளார்.
ஜோலார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி பயிற்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிலோஃபர் கபில் திமுகவில் இணைந்துள்ளார்.
யார் இந்த நிலோபர் கபில்?
2016 அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோஃபர் கபில்.

அப்போதே அவர் மீது ஏராளமான பணமோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார்.
இதன் பின்னர், திமுக அமைச்சர் துரைமுருகனை சந்தித்தாக கூறி,அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்கப்பட்டவர் பின்னர் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

ஆனால், 2021 சட்டமன்ற தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட மீண்டும் அவருக்கு சீட் வழங்காத நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தான் காரணம் என வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார்.

இதன் பிறகு கட்சிப்பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், தற்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிவிட்டு திமுகவில் இணைந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |