நீங்கள் தோற்ற தொகுதி போதும் - திமுகவிடம் காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் என்ன?

Indian National Congress DMK Election
By Karthikraja Feb 14, 2026 11:38 AM GMT
Report

நீங்கள் தோற்ற தொகுதி போதும் என திமுகவிடம் காங்கிரஸ் எம்பி மாணிக்தாகூர் கோரிக்கை வைத்துள்ளார்.

திமுக தொகுதி பங்கீடு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

திமுக கூட்டனில் அதே கட்சிகள் தொடரும் நிலையில், புதிதாக மக்கள் நீதி மையம் கூட்டணியில் இணைந்துள்ளது. 

நீங்கள் தோற்ற தொகுதி போதும் - திமுகவிடம் காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் என்ன? | Congress Manickam Tagore Demands 40 Seats From Dmk

விரைவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவை அமைக்க உள்ள திமுக, பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க திட்டமிட்டுள்ளது.

அனைத்து கட்சிகளும் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளன.

திரிஷாவை தொடர்புபடுத்தி விஜய்யை விமர்சித்த நயினார் - திமுக கண்டனம்

திரிஷாவை தொடர்புபடுத்தி விஜய்யை விமர்சித்த நயினார் - திமுக கண்டனம்

காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள் கேட்பதோடு, ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. 

நீங்கள் தோற்ற தொகுதி போதும் - திமுகவிடம் காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் என்ன? | Congress Manickam Tagore Demands 40 Seats From Dmk

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை, ஆட்சியில் பங்கு தர முடியாது என திமுக அமைச்சர்கள் காங்கிரஸை விமர்சித்து வருகின்றனர்.

நீங்கள் தோற்ற தொகுதி போதும் - திமுகவிடம் காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் என்ன? | Congress Manickam Tagore Demands 40 Seats From Dmk

ஆட்சில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்து விட்டார்.

இந்நிலையில், மீண்டும் கூடுதல் தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விவாதத்தை கிளப்பியுள்ளார்.

நீங்கள் தோற்ற தொகுதி போதும்

இந்நிலையில், 2026 தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும் அதில் 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசி இருந்தார்.

இந்த பதிவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மாணிக்கம்தாகூர், "2021 யில் 173 யில் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம்.ஆட்சி பங்கு எங்கள் உரிமை.மக்கள் தீர்மானிப்பார்கள்" என தெரிவித்துள்ளார். 

2021 தேர்தலில் திமுக 188 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இதில், 173 தொகுதிகளில் திமுகவும், 15 தொகுதிகளை மதிமுக, கோமதேக, மமக உள்ளிட்ட கட்சிகளை போட்டியிட வைத்தது.

காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கியதில், 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதில், திமுக போட்டியிட்ட 173 தொகுதிகளில், 40 தொகுதிகளில் தோல்வியடைந்து 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கடந்த தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் பெற்ற காங்கிரஸ் இந்த தேர்தலில் 40 தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது.