குரங்கு அம்மை தொற்று..அதிகரிக்கும் பலி எண்ணிக்கை - அவசர நிலையை அறிவித்த WHO!
இரண்டாவது முறையாக MPox-ஐ உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்ததுள்ளது.
குரங்கு அம்மை
ஆப்பிரிக்க நாடுகளில் Mpox எனப்படும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு Mpox எனப்படும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது .
இந்த நோயால் 517 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதை கட்டுப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் 13 அண்டை நாடுகளில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
அவசரநிலை
கடந்தாண்டை ஒப்பிடுகையில் 160 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக MPox-ஐ உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்ததுள்ளது.
பொதுவான அறிகுறிகள்:
காய்ச்சல்
தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்)
நிணநீர் கணுக்கள் வீக்கம்
தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல்
பாதிப்புகள்:
·
கண் வலி அல்லது பார்வை மங்குதல் ·
மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம்,
· உணர்வு மாற்றம், வலிப்பு
· சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல்