எம்.எல்.ஏ பதவியை இழந்த பொன்முடி..! முதல்வர் அறிவித்த அடுத்த உயர்கல்வி துறை அமைச்சர்..! முக்கிய தகவல்..!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பொன்முடி தற்போது தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
பொன்முடி வழக்கு
இன்று சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கில் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
பொன்முடிக்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 6 மாதங்களுக்கு அவரின் தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பொறுப்பு யாருக்கு..?
இந்நிலையில், அவர் வசம் இருந்த அமைச்சர் பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழக அமைச்சரவை சில மாதங்கள் முன்பு தான் மாற்றியமைக்கப்பட்டது.
தற்போது மற்றொரு அமைச்சர் பதவியை இழந்துள்ளதால், மீண்டும் அவரின் பொறுப்பை மற்றொரு அமைச்சருக்கு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சராக இருந்து வரும் அமைச்சர் ராஜாகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.