கொரோனாவை விட கொடிய நோய்; உலகை உலுக்கப்போகும் அந்த ஆபத்து - WHO வார்னிங்
கொரோனாவை விட பெருந்தொற்று பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெருந்தொற்று
சுவிட்சர்லாந்து, ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் 76-வது உலக சுகாதார சபையில், WHO-வின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தனது அறிக்கையை சமர்பித்தார்.

அதில், ``கோவிட் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அந்தப் பெருந்தொற்று இன்னும் முற்றிலுமாக மறையவில்லை. நம்மைவிட்டு தூரமாக இருக்கிறது அவ்வளவுதான்.
WHO வார்னிங்
கோவிட் தொற்றைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மற்றும் ஆபத்தான புதிய பெருந்தொற்று பரவ வாய்ப்புள்ளது. புதிய பெருந்தொற்று கொரோனாவைவிட அதிகளவிலான உடல்நல பாதிப்புகளையும் உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்தும் என்பதால் அதை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்.
எதிர்வரவுள்ள புதிய தொற்றும் எளிதில் வீழ்த்தக்கூடியதாக இருக்காது. விரைவில் அது நம் கதவைத் தட்டப்போகிறது. இப்போதே அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் செய்தாக வேண்டும்.
புதிய தொற்று பரவாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்“ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.