கொரோனா வைரஸ் பரவல் தொடரும்- உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்

Covid19 World Health Organization Localization
By Thahir Sep 28, 2021 10:18 AM GMT
Report

2019ஆம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டன.

தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட பொதுமுடக்கங்களும், கட்டுப்பாடுகளும் உலக நாடுகள் பலவற்றிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என பரிணமித்த வைரஸ் தொற்று பல நாடுகளில் மூன்றாம் அலை பாதிப்பிற்கு இட்டுச் சென்றன.

கொரோனா வைரஸ் பரவல் தொடரும்- உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் | World Health Organization Covid19 Localization

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் என்பது எதிர்பார்த்த கால அளவைக் காட்டிலும் மிகநீண்ட காலத்திற்கு இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தைச் சேர்ந்த பூனம் கெத்ரபால் சிங் முந்தைய நோய்த்தொற்று மற்றும் தடுப்பூசி பயன்பாடு ஆகியவை கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை அடைய உதவலாம் எனத் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்த்தோமானால் உலக நாடுகள் வலுவான பொதுசுகாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்தல், தனிமனித இடைவெளிகளைப் பின்பற்றுதல், முகக்கவசங்களை அணிதல், கிருமி நாசினிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுசுகாதாரத்தை முதன்மையான ஒன்றாகவும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய கட்டமைப்பையும் உருவாக்குவது கடுமையான சூழல்களில் மக்களைக் காக்க இன்றியமையாத ஒன்றாக அமையும் எனவும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.