கருத்தடை சாதனங்கள் பயன்பாடு சரிவு - எச்சரிக்கை விடுத்த WHO!
கருத்தடை சாதனங்கள் பயன்பாடு சரிந்து வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருத்தடை சாதனம்
ஐரோப்பியாவை சுற்றியுள்ள 53 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.
அதில், பாலியல் உறவு நாட்டம் கொண்ட ஆண்களிடையே 2014 ஆம் ஆண்டு 70 சதவீதத்தில் இருந்த ஆணுறை பயன்பாடு 2022 ஆம் ஆண்டு 61 சதவீதமாகக் குறைந்துள்ளது.
WHO எச்சரிக்கை
பெண்கள் பாலியல் உறவின் போது பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவது 63 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக குறைந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு இளம் பருவத்தினர் கடைசியாக பாலியல் உறவு கொண்ட போது ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் எதையும் பயன்படுத்தவில்லை.
இந்த எண்ணிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசுகள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதார துறையை சேர்ந்தவர்கள்
பாலியல் தொடர்பான கல்வியில் முதலீடுகளை அதிகப்படுத்தவும், பாலியல் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.