குரங்கம்மை - பொது சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு!

World Health Organization India Monkeypox
By Sumathi Jul 24, 2022 03:26 AM GMT
Report

குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது.

குரங்கம்மை

உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது. தொற்று நோய்கள் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது அவசர கூட்டம் நடைபெற்றது.

குரங்கம்மை -  பொது சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு! | Who Statement About Monkeybox

அதன் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ், "75 நாடுகளில் இருந்து 16,000 க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன," என்று கூறினார்.

 டெட்ரோஸ் அதானம்

இந்த பாதிப்பால் இதுவரை ஐந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலக அளவில் தற்போது இதுபோன்ற இரண்டு சுகாதார அவசரநிலைகள் மட்டுமே அமலில் உள்ளன - முதலாவதாக கொரோனா வைரஸும், இரண்டாவதாக போலியோ மற்றும் அதை ஒழிப்பதற்கான முழு முயற்சியும் உள்ளன.

குரங்கம்மை பாதிப்பை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்த வேண்டுமா என்பதில் அவசர குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்று கூறிய அவர், எவ்வாறாயினும் இந்த பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதால்

 ஏற்படும் ஆபத்து

இது உண்மையில் சர்வதேச கவலைக்குரியது என்ற முடிவுக்கு தாம் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி குரங்கம்மையால் ஏற்படும் ஆபத்து அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஐரோப்பிய பிராந்தியத்தைத் தவிர உலகின் மற்ற இடங்களில் மிதமானதாக உள்ளது," என்றும் கூறினார்.

குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

அறிகுறிகள் 

இந்த தொற்று பாதித்த மாணவர்களுக்கு ஆரம்பகட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும்.14 முதல் 21 நாட்கள் வரை இந்தத் தொற்று, தாமாகவே சரியாகிவிடும்.