குரங்கு காய்ச்சல் உலகம் சந்திக்கும் வலிமையான சவால் - உலக சுகாதார அமைப்பு..!

World Health Organization ‎Monkeypox virus
By Thahir May 23, 2022 11:36 PM GMT
Report

உலகம் சந்திக்க கூடிய சவால்களில் முக்கியமான சவால் குரங்கு காய்ச்சல் என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 21-ந் தேதி நிலவரப்படி,உலகில் 12 நாடுகளில் மொத்தம் 92 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,

28 பேருக்கு அந்நோய் இருப்பதாக சந்தேகம் எழுந்திருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

ஜெனீவாவில் ஐ.நா.வின் உலக சுகாதார மாநாட்டில் பங்கேற்ற உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கிப்ரியசஸ் பேசுகையில்,

உலகில் கொரோனா மட்டும் பிரச்சனை இல்லை,குரங்கு காய்ச்சல்,உக்ரைன் போர்,பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் ஆகியவை வலிமையான சவால்களாக உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.