தனிமையால் தவிப்பு; 15 சிகரெட் புகைப்பதற்கு சமம் - அதிர்ச்சி தெரிவிக்கும் WHO
தனிமை குறித்து உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
தனிமை
உலகில் பல்வேறு வகையான நோய்கள் அதிகரித்த வன்ணம் உள்ளன. இந்த நோய்களில் பெரும்பாலானவற்றின் பின்னணியில் தனிமையே உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து வயதினரும் தனிமையால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் தனிமையைக் குறைக்க ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. இந்த குழுவிற்கு அமெரிக்க சாஎஜெண்ட் ஜெனரல் விவேக் மூர்த்தி மற்றும் ஆப்பிரிக்க யூனியன் இளைஞர் தூதர் சிடோ எம்பெம்பா தலைமை தாங்குகின்றனர்.
WHO தகவல்
தொடர்ந்து, நமது தனிமை மற்றும் தனிமைப்படுத்தலின் தொற்றுநோய் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், தனிமையால் அவதிப்படுவது 1 நாளைக்கு 15 சிகரெட் பிடிப்பதற்கு சமம். அதிக எடை கொண்ட பிரச்சணையை விட இந்த தனிமை மிகவும் தீவிரமானது.
மறுபுறம் தனிமை தனிப்பட்ட வாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் பாதிக்கிறது. இது இதய நோய், பதட்டம், டிமென்ஷியா, பக்கவாதம், மன அழுத்தம் போன்ற பிரச்சணைகளை ஏற்படுத்துகிறது. இந்த எல்லா நோய்களையும் கையாள்வதில் தனிமையின் வீதத்தைக் குறைப்பது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிமை விரும்பிகளை ஈர்க்கும் அழகிய தனி தீவு; அதில் உலகின் தனிமையான ஒரு குட்டி வீடு - எங்கு உள்ளது தெரியுமா?
மேலும், இந்தக் குழு அடுத்த மூன்று ஆண்டுகளில் அவுட்லைன் செய்யும். தனிமையை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பது குறித்து பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்படும். சமூகத்தினரிடையே தொடர்பை மீண்டும் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று இந்த சிறப்புக் குழு பரிந்துரை செய்யும்.