தனிமை விரும்பிகளை ஈர்க்கும் அழகிய தனி தீவு; அதில் உலகின் தனிமையான ஒரு குட்டி வீடு - எங்கு உள்ளது தெரியுமா?

Iceland World
By Jiyath Sep 13, 2023 12:58 PM GMT
Report

உலகின் மிகவும் தனிமையான தீவு மற்றும் வீடு குறித்த தகவல். 

எல்லியே தீவு

ஐஸ்லாந்து நாட்டின் தெற்கே எல்லியே என்ற தீவு உள்ளது. இந்த தீவு110 ஏக்கர் பரப்பளவோடு வெஸ்ட்மன்னேஜார் தீவுக்கூட்டத்தில் 3வது பெரிய தீவாகும். வனவிலங்குகள் அதிக அளவு இல்லாத இந்த தீவில் பஃபின்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன.

தனிமை விரும்பிகளை ஈர்க்கும் அழகிய தனி தீவு; அதில் உலகின் தனிமையான ஒரு குட்டி வீடு - எங்கு உள்ளது தெரியுமா? | Loneliest House In The World Island In Iceland I

பெரும்பாலும் புல்வெளியாக இருக்கும் இந்த தீவில்தான் இந்த அழகிய, தனிமையான வீடு உள்ளது. இந்த வீடானது ஆஸ்திரேலிய வேட்டை சங்கத்தால் கட்டப்பட்ட ஒரு விடுதியாகும். இந்த தீவில் நிரந்தர மக்கள் தொகை என்று ஒருவரும் இல்லை. வேட்டைக்கோ அல்லது சுற்றுலாவுக்கோ செல்பவர்கள் மட்டும்தான் இங்கு சென்று வருகிறார்கள்.

தனிமை விரும்பிகளை ஈர்க்கும் அழகிய தனி தீவு; அதில் உலகின் தனிமையான ஒரு குட்டி வீடு - எங்கு உள்ளது தெரியுமா? | Loneliest House In The World Island In Iceland I

ஆனால் முற்காலத்தில் இங்கு மக்கள் வாழ்ந்ததாகவும், சுமார் 300 ஆண்டுகளாக 5 குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அவர்கள் கடல்கோழி, பஃபின்களை வேட்டையாடவும், கால்நடைகளை வளர்த்து, கடலில் மீன் பிடித்ததாகவும் நம்பப்படுகிறது. அவர்கள் இந்த எல்லியே தீவை விட்டு 1930களில் வெளியேறியுள்ளனர்.

தனிமை விரும்பிகளை ஈர்க்கும் அழகிய தனி தீவு; அதில் உலகின் தனிமையான ஒரு குட்டி வீடு - எங்கு உள்ளது தெரியுமா? | Loneliest House In The World Island In Iceland I

நடுக்கடலில் நகர நாகரீகத்திலிருந்து விலகி வாழ்வது குடும்பங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது மற்றும் உணவு மற்றும் பான தேவைகளில் சிக்கல் ஏற்பட்டதே அவர்கள் இந்த தீவை விட்டு வெளியேறிதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

அழகிய வீடு

இந்த தீவில் யாரும் வசிக்காத போதும் மக்கள் அங்கு பஃபின்களை வேட்டையாட மட்டும் அவ்வப்போது செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து 1950களில் சங்கம் இந்த தீவில் கேபின்களை உருவாக்கியது. மக்கள் வேட்டையாடும் பருவத்தில் அல்லது பறவைகள் முட்டையிடும் பருவத்தில் தங்க இது வாய்ப்பாகும்.

தனிமை விரும்பிகளை ஈர்க்கும் அழகிய தனி தீவு; அதில் உலகின் தனிமையான ஒரு குட்டி வீடு - எங்கு உள்ளது தெரியுமா? | Loneliest House In The World Island In Iceland I

மேலும் வேட்டைக்காரர்கள் சரிவுகளில் கட்டப்பட்ட அறைகளை அடைய ஒரு ஜிப்லைனும் கட்டப்பட்டது. ஆனால் இந்த வீட்டில் ,மின்சாரமும், குடிநீரும் இல்லை. தற்போது அருகில் உள்ள ஹேமே தீவிலிருந்து விவசாயிகள் தங்கள் ஆடுகளை மேய்க்க இந்தத் தீவுக்கு வருகிறார்கள்.

கோடைக் காலத்தில், விவசாயிகள் தங்கள் ஆடுகளையும் இங்கு விட்டுச் செல்கின்றனர். இங்கு 200க்கும் மேற்பட்ட ஆடுகள் புல் மேய்கின்றன.