டிடிவி தினகரன் vs தங்கத்தமிழ்செல்வன் - தேனீ தொகுதி யாருக்கு..?

Election Theni Lok Sabha Election 2024
By Karthick Apr 09, 2024 11:55 PM GMT
Report

டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்த தங்கத்தமிழ்ச்செவல் தற்போது அவரை எதிர்த்தே தேனீ மக்களவை தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

டிடிவி - தங்கத்தமிழ்செல்வன்

2018-ஆம் ஆண்டில் அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்சனையில் கட்சியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டபோது அவருடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தங்கத்தமிழ்செல்வன்.

who-is-winning-in-theni-constituency-ttv-dinakaran

பின்னர் டிடிவி தினகரன் துவங்கிய அமமுகவில் கொள்கை பரப்பு செயலராக இருந்த தங்க தமிழ் செல்வன், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக காரணம் கூறப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் 2021-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். முன்னர் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்ட தங்கத்தமிழ் செல்வன் தற்போது திமுகவில் தேனீ மக்களவை வேட்பாளராக டிடிவி தினகரனுக்கு எதிராக நிற்கிறார்.இதுவே அந்த தொகுதியே ஸ்டார் தொகுதியாக மாற்றியுள்ளது.

தேனீ மக்களவை தொகுதி

தமிழக மக்களவை தொகுதிகளில் 33-வது தொகுதியான தேனீயில் மொத்தமாக 11,12,499 வாக்காளர்கள் உள்ளனர். ஓபிஎஸ் மகன் இரவீந்திரநாத் குமார் 2019-இல் வெற்றி பெற்றிருந்தார்.

who-is-winning-in-theni-constituency-ttv-dinakaran

தேனீ மக்களவை தொகுதியில் இருக்கும் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 4 தொகுதிகளை (ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், சோழவந்தான்) திமுகவும், 2 தொகுதிகளை(உசிம்பட்டி, போடி) அதிமுகவும் வென்று தங்கள் வசம் வைத்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தேனி

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தேனி

நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் தங்கத்தமிழ் செல்வன், அதிமுகவில் நாராயணயசாமி , பாஜக கூட்டணியில் அமமுகவின் வேட்பாளராக டிடிவி. தினகரன், நாம் தமிழர் கட்சி மதன் என மொத்தமாக 25 பேர் களத்தில் உள்ளனர்.

களம் யாருக்கு

ஆளும் கட்சி, தொகுதியிலேயே இருக்கும் மிகவும் பரிட்சயமான முகம் போன்றவை தங்கத்தமிழ்செல்வனுக்கு சாதகமாக அமையலாம்.

who-is-winning-in-theni-constituency-ttv-dinakaran

தேர்தல் அரசியலுக்கு புதியவர் என்றாலும், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வரும் தொகுதியில் பரிட்சயமான நாராயணயசாமியை வேட்பாளராக இறங்கியுள்ளது அதிமுக.

மாநில - மத்திய அரசுகளின் அதிருப்தி வாக்குகள், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளை குறிவைத்துள்ளது அதிமுக. பாஜக கூட்டணியில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெரும் ஸ்டார் கேண்டிடேட் என்றே சொல்லலாம்.

who-is-winning-in-theni-constituency-ttv-dinakaran

கூட்டணியில் இருக்கும் ஓபிஎஸ் தேனீ பகுதிகளில் பெரும் ஆதிக்கத்தை கொண்டவர் என்பதும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் திட்டங்களும் டிடிவி'க்கு சாதகமாக அமையக்கூடும்.