திண்டுக்கல் களம் யாருக்கு..? கூட்டணி கட்சிகளின் மோதல்
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திமுக - அதிமுக - பாஜக கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி இல்லை.
திண்டுக்கல் மக்களவை தொகுதி
தமிழகத்தின் 22-வது தொகுதியான திண்டுக்கல்லில் மொத்தமாக 18,66,376 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுகவின் பி.வேலுச்சாமி வெற்றி பெற்றார்.
பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம் மற்றும் திண்டுக்கல் போன்ற 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய இந்த மக்களவை தொகுதியில் அதிமுக 7 முறை வெற்றி வாகை சூடியுள்ளது.
வேட்பாளர்கள்
2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு திமுக - அதிமுக - பாஜக என 3 கட்சிகளும் இந்த தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கியுள்ளது.
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம், அதிமுக கூட்டணியில் SDPI கட்சியின் முகமது முபாரக், பாஜக கூட்டணியில் பாமகவின் மாநில பொறுப்பாளர் திலகபாமா மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் துரை கயிலை ராஜன் போன்றோர் போட்டியிடுகிறார்கள்.
களம் யாருக்கு
பாமகவின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள திலகபாமா, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டிவீரன்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்பதாலும், 15 நாட்கள் மதுக்கடை மூடிய வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்று வந்ததால் அவர் உள்ளுரில் தெரிந்த முகமாக இருக்கின்றார்.
அதே நேரத்தில், திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியான திண்டுக்கல்லில் சிறுபான்மையின மக்களின் வாக்குகளும் கணிசமான அளவில் இருக்கும் காரணத்தால், SDPI கட்சியின் வேட்பாளர் வெற்றி வாய்ப்பை குறிவைத்துள்ளார்.
தற்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமியும் உள்ளூர்க்காரர் என்பதும், ஆளும் கட்சி கூட்டணி போன்ற விஷயங்கள் எல்லாம் கூட்டணி கட்சி வேட்பாளரான சச்சிதானந்ததிற்கு கைகொடுக்கலாம்.