IPS'ஸாக ராஜினாமா..தேடி வந்த கேபினட் பதவி!! ஒடிசாவில் மாஸ் காட்டும் வி.கே.பாண்டியன் யார்??
தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தவுடனே கேபினட் பதவியை அவருக்கு அளித்துள்ள தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன் குறித்து தற்போது காணலாம்.
வி.கே.பாண்டியன்
2000-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்து வந்துள்ளார்.தமிழ்நாட்டைச் சேர்ந்த பாண்டியன், 2002 ஆம் ஆண்டு காலாஹண்டி மாவட்டத்தில் உள்ள தர்மகர் சப்-கலெக்டராக தனது பணியை துவங்கினார்.அப்போது அவர் விவசாயிகளின் உரிமைகளுக்காக செய்த பணிகள் அவரை மேல மக்களிடையே பிரபலப்படுத்தியது.
மறுவாழ்விற்கான பொதுப்பணித் துறைகளின் (PWDs) சிறப்பாக செயலாற்றி இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதைப் பெற்றவரான வி.கே பாண்டியன், பல சமயங்களில் லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் (LBSNAA)'க்கு பாதுகாப்புப் படைகள் மற்றும் நிர்வாகிகளின் ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு பாடம் பாண்டியன் அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2005 ஆம் ஆண்டில், அவர் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் நக்சல்களின் ஆதிக்கத்தை அடக்குவதில் பெரும் பங்காற்றினார். பின்னர் 2007-ஆம் ஆண்டில் கஞ்சம் மாவட்டத்தின் கலெக்டராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார்.
இம்மாவட்டதில் கலெக்டராக இருந்த அவர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பாக பணியாற்றியதற்காக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடமிருந்து தேசிய விருதை, பெற்றார். மேலும், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பல ஆண்டுகளாக பணியாற்றியதன் காரணமாக, பாண்டியன் "ஹெலன் கெல்லர் விருது"ம் வி.கே. பாண்டியன் பெற்றார்.
எண்ணிலடங்கா நல பணிகள்
அதே நேரத்தில், நாட்டிலேயே சிறந்த மாவட்டத்திற்கான(கஞ்சம்) NREGSக்கான தேசிய விருதையும் இரண்டு முறை பெற்றுள்ளார் வி.கே.பாண்டியன். மேலும், பாண்டியனின் தலைமையின் கீழ் தான் NREGS-ல் வங்கியில் ஊதியம் வழங்குவது முதலில் கஞ்சம் மாவட்டத்தில் துவங்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் நாடு முழுவதும் இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கஞ்சத்தில் மாவட்டத்தில் பணியாற்றிய போது தான், அம்மாநில முதல்வர் பட்நாயக்குடன் நெருக்கமாகி பின்னர் 2011 முதல் முதல்வரின் தனிச் செயலாளராகினார் வி.கே. பாண்டியன். 2019-ஆம் ஆண்டில் பட்நாயக் ஐந்தாவது முறையாக முதலமைச்சரான பிறகு, அரசுத் துறைகளில் சில மாற்றங்களைச் செயல்படுத்த பாண்டியனுக்கு '5T செயலாளர்' எனப்படும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்!! ஆளுநர் பேச்சு!! முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்!!
தற்போது தனது பதவியை வாலண்டரி ரிடைர்மென்ட் செய்துள்ள வி.கே.பாண்டியன், அவரை கேபினட் அந்தஸ்துடன் 5T மற்றும் நபின் ஒடிசா என்ற திட்டத்தின் தலைவராக அம்மாநில அரசு நியமித்துள்ளது. வி.கே பாண்டியன் நேரடியாக முதலமைச்சரின் கீழ் பணிபுரிவார் என்று மாநில பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.