நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்!! ஆளுநர் பேச்சு!! முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்!!

M K Stalin DMK Governor of Tamil Nadu
By Karthick Oct 24, 2023 09:48 AM GMT
Report

நேற்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசை விமர்சித்திருந்த நிலையில், இன்று அதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆளுநர் விமர்சனம்

நேற்று திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என தமிழக அரசு நினைக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

mk-stalin-slams-rnravi-in-marudhu-brothers-issue

மேலும், காந்தியும் தமிழகத்தில் பிறந்திருந்தால் அவரை சாதி தலைவராகி இருப்பார் என்றும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இந்நிலையில், அதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காந்தியும் சாதி தலைவராகியிருப்பார்..தமிழகத்தில் பிறந்திருந்தால்!! ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம்!!

காந்தியும் சாதி தலைவராகியிருப்பார்..தமிழகத்தில் பிறந்திருந்தால்!! ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம்!!

முதல்வர் பதிவு

மேலும், காந்தியும் தமிழகத்தில் பிறந்திருந்தால் அவரை சாதி தலைவராகி இருப்பார் என்றும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இந்நிலையில், அதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  

mk-stalin-slams-rnravi-in-marudhu-brothers-issue

அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் நிலத்தின் உரிமைகளைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான மறவர் மருதிருவரின் புகழ் ஓங்குக - சின்ன மருதும், பெரிய மருதும் பீரங்கிகளுக்கு முன்னால் வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ்! இது 1801-ஆம் ஆண்டு!

mk-stalin-slams-rnravi-in-marudhu-brothers-issue

கழக அரசு அமைந்ததும் மருது சகோதரர்கள் சிலையைச் சென்னையில் அமைக்க 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுச் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவண்ணத்தில் 'தென்பாண்டிச் சிங்கம்' எனக் கலை வடிவம் பெற்று, வாளுக்குவேலி வழியாகக் காலத்தால் அழியாத காவியமாக அவர்களது கதை நிலைத்திருக்கிறது.

திமு கழக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்! இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் 'நடிப்புச் சுதேசிகள்' எனப் பாடினார் என கடுமையாக சாடியிருக்கின்றார்.