யார் இந்த தமிழ் வம்சாவளி உமா குமரன்- இங்கிலாந்து நாட்டின் எம்.பி.யாக தேர்வு!
வெளியாகி வரும் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் பெண்ணான உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.
இங்கிலாந்து தேர்தல்
உலக நாடுகள் உற்றுநோக்கிய இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அங்கு மொத்தம் 650 நாடாளுமன்ற தொகுதிகள்.
இதில், ஆட்சி அமைக்க தேவைப்படும் மெஜாரிட்டி 326 இடங்கள். நடந்து முடிந்து வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில் ரிஷி சுனக் கட்சியான conservative கட்சி தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. பழமைவாத கட்சி எனப்படும் ரிஷி சுனக் கட்சி இம்முறை வெறும் 120 இடங்களில் தான் முன்னிலை வகிக்கின்றன.
பிரதான எதிர்கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சி இம்முறை 409 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. நாட்டின் அடுத்த பிரதமராக தொழிலாளர் கட்சியை சேர்ந்த கீர் ஸ்டார்மர் பதவியேற்கிறார்.
உமா குமரன்
இக்கட்சி சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் தொழிற் கட்சியை சேர்ந்த ஸ்ட்ராட்ஃபோர்ட், போ(Stratford and Bow) தொகுதியான நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கையை பூர்விகமாக கொண்ட உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். உமா குமரனின் பெற்றோர் போரின் போது லண்டனில் குடியேறிய நிலையில், லண்டனில் பிறந்து வளர்ந்தார் உமா குமரன்.
அரசியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், செப்டம்பர் 2020-ல், கெய்ர் ஸ்டார்மரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநராக பணியாற்றி வந்தார்.
வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளில் அவர், எதிர்த்து போட்டியிட்ட ஜோ ஹட்சன் 7,511 வாக்குகளை பெற்ற நிலையில், உமா குமரன் மொத்தம் 19,145 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.