முத்துராமலிங்க தேவர் ,அம்பேத்கர் தான் உண்மையான பெரியார் - சீமான் பரபரப்பு பேச்சு!
ஈரோட்டில் மீண்டும் பெரியார் குறித்து சீமான் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரியார்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாகப் பேசினார்.
அப்போது கேரளாவில் வைக்கம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடந்த அநீதிக்கான போராட்டத்தில் பெரியார் பங்கேற்றதன் காரணமாக அவரை வைக்கும் பெரியார் என்று அழைக்கிறார்கள். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சித் தலைமை கேட்டுக்கொண்டதால் தான் போராட்டத்தில் கலந்து கொண்டாரே தவிர ,
தமிழகத்தில் குற்றப் பரம்பரை சட்டத்துக்கு எதிராக அவர் குரல் கொடுக்கவில்லை என்று கூறினார்.மேலும் குற்றப் பரம்பரை சட்டத்துக்குச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர் முத்துராமலிங்க தேவர் மட்டும் தான். அவருக்குச் சாதி குறியீடு செய்தது யார்?என்று கேள்வி எழுப்பினார்.
சீமான்
தொடர்ந்து பேசியவர், குற்றப் பரம்பரை சட்டத்தைத் தகர்த்து எறிந்தவர் அம்பேத்கர். எனவே இவர்கள் 2 பேரும்தான் உண்மையான பெரியார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,’பழனிபாபாவைரேகை சட்டத்துக்கு எதிராகப் போராடிய இடத்தில், தனது சொந்த 5 ஏக்கர் நிலத்தை விற்று அந்த பணத்தைக் கொடுத்து கல்லூரியை உருவாக்கியவர்.
ஆனால் பெரியார் அனைவரையும் படிக்க வைத்தார் என்று முட்டாள்கள் தான் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்று கூறினார். இதனால் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.