இது பெரியார் மண்ணெல்லாம் இல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான் - சீமான் சர்ச்சை பேச்சு!
எங்களுக்கு பெரியாரே மண்தான் என சீமான் சாடியுள்ளார்.
பெரியார் மண்ணா?
புதுக்கோட்டையில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈழ விடுதலைக்கு எதிரானவர் பெரியார் நானே.. ஒரு அடிமை. இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?
என்று ஈழத் தந்தை செல்வாவிடம் சொன்னவர்தான் பெரியார். அந்த பெரியார்தான் பிரபாகரனுக்கு முன்னுதாரணமா? பெரியார் கருத்துகள்தான் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவும்,
பிரபாகரனின் ராணுவத்தில் பெண்களை சேர்க்கவும் காரணம் எனில் பெரியார் வழியில் அதிகாரத்துக்கு வந்த அண்ணாவும் கருணாநிதியும் ஏன் பெண்களுக்கு உரிமை கொடுக்கவில்லை? என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதா? பெரியாருக்கும் பிரபாகரனுக்கும் என்ன தொடர்பு?
சாடிய சீமான்
வேலுநாச்சியாரைப் பார்த்துதான் பிரபாகரன் தமது ராணுவத்தில் பெண்களை சேர்த்தார். தமிழ்நாட்டில் முதல் இந்தி எதிர்ப்பு போரை நடத்தியது பெரியார் என பேசுகிற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் வரலாற்றை தலையில் அடித்துக் கொண்டு சிரித்து கொண்டுதான் போக வேண்டும்.
தமிழ்நாட்டில் முதன் முதலாக இந்தி பள்ளியை திறந்தவரே உங்க பெரியார்தான். இந்தி எதிர்ப்பு போரில் தமிழர்கள் தீக்குளித்த போது கொலைகாரர்களாக பார்த்தவர் பெரியார்தான். கடன் தொல்லையால் கீழப்பழூர் சின்னசாமி தற்கொலை செய்ததாக இழிவுபடுத்தியது பெரியார்தான்.
இந்திக்கு எதிராக போராடுகிற கருங்காலிகளை பெட்ரோல், டீசல் கொண்டு அழிங்க என்று சொன்னவர்தான் பெரியார். இதனை பெரியார் மண் என்று சொன்னால் கொலை வெறியாகிவிடும். இது சேர சோழ பாண்டியர் மண்.
பூலித்தேவர் மண். வேலுநாச்சியார் மண். முத்துராமலிங்க தேவர் என்கிற பெருமகனாரின் மண். இது என் மண். பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான் என தெரிவித்துள்ளார்.