தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமனம்? டெல்லி தலைமை ஆலோசனை!

Tamil nadu BJP Delhi
By Swetha Jul 22, 2024 06:09 AM GMT
Report

தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமிப்பது குறித்து டெல்லி தலைமை ஆலோசித்து வருகிறது.

பா.ஜ.க தலைவர்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் தொடர்பாக படிப்பதற்காக அடுத்த மாதம் இறுதியில் லண்டன் செல்ல இருக்கிறார். அவர் படிப்பு முடிந்து திரும்புவதற்கு சுமார் 6 மாதங்களுக்கும் மேல் ஆகும்.

தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமனம்? டெல்லி தலைமை ஆலோசனை! | Who Is The New Leadert For Tamil Nadu Bjp

இந்த கால கட்டத்தில் கட்சி பணியை பார்க்கப்போவது யார்? என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக பா.ஜ.க. அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் டெல்லி செல்கிறார். அங்கு தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவராக யாரையாவது நியமிக்கலாமா? அல்லது தற்காலிகமாக செயல் தலைவராக யாரையாவது நியமிக்கலாமா என்றும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் தோல்வி எதிரொலி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா?

தேர்தல் தோல்வி எதிரொலி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா?

ஆலோசனை

இந்த நிலையில், புதிய தலைவருக்கான பரிசீலனையின்போது நயினார் நாகேந்திரன் பெயர் அடிபடுவதாக தெரியவந்துள்ளது. இது பற்றி அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, தற்காலிகமாக தலைவரை நியமிப்பது சாத்தியமில்லை.

தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமனம்? டெல்லி தலைமை ஆலோசனை! | Who Is The New Leadert For Tamil Nadu Bjp

முன்னதாக மத்திய மந்திரி எல். முருகன் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகி மத்திய மந்திரி ஆனபோது 8 மாதம் தலைவர் இல்லாமல் தான் இருந்தது. அதேபோல இப்போதும் அப்படியே விட்டு விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஒரு வேளை புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்தால் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய மூவரில் ஒருவரை நியமிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.