சிறந்த கேப்டன் யார்..? - யாருமே எதிர்பார்க்காத பதிலை கூறி ஷாக் கொடுத்த ஷமி!

MS Dhoni Cricket Indian Cricket Team Mohammed Shami Sports
By Jiyath Feb 08, 2024 06:12 AM GMT
Report

உலகில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு இந்திய வீரர் முகமது ஷமி பதிலளித்துள்ளார். 

சிறந்த கேப்டன் 

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.

சிறந்த கேப்டன் யார்..? - யாருமே எதிர்பார்க்காத பதிலை கூறி ஷாக் கொடுத்த ஷமி! | Who Is Mohammed Shami S Best Captain

கடந்த 2020ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியிடம் உலகில் சிறந்த கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் - தங்கும் விடுதியில் அதிர்ச்சி சம்பவம்!

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் - தங்கும் விடுதியில் அதிர்ச்சி சம்பவம்!

ஷமி பதில் 

அதற்கு பதிலளித்த அவர் "இது மிகவும் கடினமான கேள்வி. சிறந்த கேப்டன் யார் என்று கூறுவது என்றால் மற்றவருடன் ஒப்பிடுவது போல இருக்கும். அது தவறாக மாறிவிடும்.

சிறந்த கேப்டன் யார்..? - யாருமே எதிர்பார்க்காத பதிலை கூறி ஷாக் கொடுத்த ஷமி! | Who Is Mohammed Shami S Best Captain

உலகில் வெற்றிகரனமான கேப்டன் யார் என்று கேட்டால் அது தோனி என்று சொல்லுவேன். அவரை போல யாரும் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள்" என்று ஷமி கூறியுள்ளார்.