விஜய் கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளர் - யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?

Vijay Anbumani Ramadoss Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 28, 2024 12:41 PM GMT
Report

தவெக தலைவர் விஜயின் அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி செயல்பட்டு வருகிறார்.

தவெக மாநாடு

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நேற்று(27.10.2024) நடைபெற்றது. லட்சக்கணக்காண தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். 

vijay tvk speech

இத்தனை ஆண்டுகளாக சினிமா மேடைகளில் நடிகராக பேசிய விஜய், நேற்று அரசியல் மேடையில் அரசியல்வாதியாக, கட்சி தலைவராக உரையாற்றினார்.

ஜான் ஆரோக்கியசாமி

45 நிமிடங்கள் பேசிய அவர் தனது கட்சி கொள்கைகளை அறிவித்ததோடு, தனது கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என அறிவித்தார். விஜய்யின் பேச்சு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ஜான் ஆரோக்கியசாமி john arokiasamy vijay political strategist

விஜயின் இந்த அரசியல் பேச்சுக்கு பின்னணியில் உள்ளது யார் என பலரும் விவாதித்து வருகின்றனர். விஜய்க்கு அரசியல் தொடர்பான பயிற்சி அளித்து, அவர் மேடையில் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என விஜயின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வருபவர் ஜான் ஆரோக்கியசாமி.

வியூக வகுப்பாளர்கள்

தற்போது அனைத்து பெரிய கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற political strategist களை பயன்படுத்தி வருகின்றன. களநிலவரத்தின்படி மக்களின் நாடித்துடிப்பையும், எண்ணங்களையும் அறிந்து அதற்கேற்ப தலைவர், கட்சி மற்றும் தேர்தல் சார்ந்த வியூகங்களை வகுத்து தருவது தான் இவர்களின் பிரதான பணி.

political strategist john arokiasamy

இதற்காக இந்த அரசியல் வியூக வகுப்பாளர்களுக்கு அரசியல் கட்சிகள் கோடிகளை அள்ளிக்கொடுக்கின்றன. இந்தியாவில் பிரபல அரசியல் ஆலோசகராக வலம் வருபவர் பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர். இவர் பாஜக, காங்கிரஸ், திமுக என பல அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில் மும்பையில் 'பெர்சனா டிஜிட்' என்ற பெயரில் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ஜான் ஆரோக்கிய சாமி தான் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மாற்றம் முன்னேற்றம் அன்புமணி

திருச்சியைச் சேர்ந்த ஜான் ஆரோக்கிய சாமி ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய புரமோஷன் அதிகாரியாகவும், ஐ.நா-வின் பருவநிலை மாற்றத்திற்கான குழுவின் பிரசார ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார். 

மாற்றம் முன்னேற்றம் அன்புமணி

2016 சட்டமன்ற தேர்தலில் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற முழக்கம் மூலம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர் ஜான் ஆரோக்கியசாமிதான். இந்த தேர்தலில் பாமக தனித்து நின்று 5.36% வாக்குகளை பெற்று 3வது பெரும் கட்சியாக உருவெடுத்தது. மேலும், 2019 தேர்தலில் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டிருக்கிறார்.

திமுக, அதிமுக என்ற இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாமகவை முன்னிறுத்திய ஜான் ஆரோக்கியசாமி, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். கட்சி பேதமின்றி ஒரு நடிகராக தமிழக மக்கள் ரசித்து வந்த விஜய்யை, பிறகட்சிகளின் எதிர்பிரச்சாரங்களை எதிர்கொண்டு, ஒரு அரசியல்வாதியாக, 2026 சட்டமன்ற தேர்தலின் முதல்வர் வேட்பாளராக மக்களிடம் கட்டமைக்கும் பணியை ஜான் ஆரோக்கியசாமி கையிலெடுத்துள்ளார்.