5 ஸ்டார் ஹோட்டல் போல் ஆசிரமம், பாலியல் வன்கொடுமை - போலே பாபா தகவல் அம்பலம்!
போலே பாபா சாமியாருக்கு சொகுசு ஆசிரமமும் பல கோடி ரூபாய் சொத்துக்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
போலே பாபா
உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டம் முடிந்து வெளியேறிய போது நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 121 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிர்ச்சி தகவல்
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் உள்ளது. அவர் நிறைய சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்களை நாங்கள் கைப்பற்றி இருக்கிறோம். 13 ஏக்கரில் அவர் 5 நட்சத்திர ஓட்டல் போல சொகுசு ஆசிரமத்தை கட்டியுள்ளார்.
அந்த ஆசிரமம் அமைந்துள்ள இடம் மட்டும் ரூ.4 கோடி மதிப்புள்ளது. போலே பாபாவின் உண்மையான பெயர் சூரஜ் பால். இதற்கு முன் காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றியுள்ளார்.
இ ஆவணங்களை ஆய்வு செய்த போது அவருக்கு மேலும் பல சொத்துகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
இவர் மீது ஆக்ரா எடாவா காஸ்கஞ்ச பரூக்காபாத் மற்றும் ராஜஸ்தானில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.