கனடா பிரதமர் ரேஸில் தமிழ் பெண் - யார் இந்த அனிதா ஆனந்த்?
கனடா பிரதமருக்கான ரேஸில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட அனிதா ஆனந்த் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது.
கனடா பிரதமர்
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 9 ஆண்டுகளாக கனடா பிரதமராக பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ, நேற்று(06.01.2025) தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை தான் பிரதமர் பதவியில் தொடர்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளதால் அடுத்த கனடா பிரதமர் என்ற பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
அனிதா ஆனந்த்
இந்நிலையில் பிரதமர் பதவிக்கான ரேசில் தமிழ் பெண்ணான அனிதா ஆனந்தும் முன்னணியில் உள்ளார் என கூறப்படுகிறது. அனிதா ஆனந்தின் தாய் பெற்றோர் இருவரும் மருத்துவர்கள் ஆவர்கள். மயக்கவியல் நிபுணரான இவரின் தாய் ஆனந்த் சரோஜ் தௌலத் ராம் பஞ்சாபை பூர்விமாக கொண்டவர். அறுவை சிகிச்சை மருத்துவரான இவரின் தந்தை சுந்தரம் விவேக் ஆனந்த் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
57 வயதான அனிதா ஆனந்த் தற்போது போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக பதவி வகித்து வருகிறார். முன்னதாக பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது ராணுவத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் சார்பாக வாதிட்டதற்காக இவருக்கு காந்தி அமைதி விருது வழங்கப்பட்டது.
பாராட்டு
முன்னதாக பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக பதவி வகித்த போது கொரோனா நேரத்தில் தடுப்பூசிகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை விரைவாக கொள்முதல் செய்ததற்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
நோவா ஸ்கோடியாவில் பிறந்து வளர்ந்த அனிதா ஆனந்த், 1985 ஆம் ஆண்டில் ஆன்டாரியோவிற்கு குடிபெயர்ந்தார். இவருக்கு அனிதா மற்றும் கீதா என இரு சகோதரிகள் உள்ளனர். அனிதா ஆனந்த் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் BA பட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.
டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற இவர் அங்கு சந்தித்த ஜான் என்பவரை கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளது. அரசியலில் இறங்கும் முன்னர், டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப்பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.