பதவி விலகிய பிரதமர்; அமெரிக்காவுடன் இணைகிறதா கனடா? - டிரம்ப் வழங்கிய ஆஃபர்

Donald Trump United States of America Justin Trudeau Canada
By Karthikraja Jan 07, 2025 06:41 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்குமாறு டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 9 ஆண்டுகளாக கனடா பிரதமராக பதவி வகித்து வந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ.

justin trudeau

கடந்த சில மாதங்களாகவே இந்தியா போன்ற வெளிநாடுகளுடனான உறவில் குழப்பம், பொருளாதார வளர்ச்சி மந்தம், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகள் கனடாவில் நீடித்து வருகிறது. 

டொனால்ட் டிரம்பிற்கு ரூ.42 கோடி அபராதம் - பாலியல் வழக்கால் வந்த சிக்கல்

டொனால்ட் டிரம்பிற்கு ரூ.42 கோடி அபராதம் - பாலியல் வழக்கால் வந்த சிக்கல்

பிரதமர் பதவி ராஜினாமா

இதனையடுத்து எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த போது முக்கிய கூட்டணி கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி (NDP) ட்ரூடோவை ஆதரிக்க மறுத்துவிட்டது. 

justin trudeau resignation reason

இதனையடுத்து, சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைத்த ட்ரூடோவிற்கு கட்சியின் உள்ளேயே எதிர்ப்பு உருவானது. கடந்த மாதம் துணை பிரதமராக பதவி வகித்து வந்த கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் ராஜினாமா செய்த நிலையில்நேற்று(06.12.2025) ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

டிரம்ப் அழைப்பு

இந்நிலையில், அமெரிக்கா அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறுவதை நான் உட்பட பலரும் விரும்புகிறார்கள். 

justin trudeau trump

கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம். இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. 

இதை அறிந்துதான் கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும், மேலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து கனடா முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

பனாமா கால்வாய்

கடந்த மாதமும் இது தொடர்பாக பேசிய டொனால்ட் டிரம்ப், அதிபராக பதவியேற்றதும் கனடாவிற்கு 25% அதிக வரி விதிப்பேன். வேண்டுமானால் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடாவை இணைத்து அதன் ஆளுநராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கலாம் என பேசியிருந்தார். தற்போது கனடா அரசியலில் குழப்பமான நிலை நிலவி வரும் நிலையில் மீண்டும் இதை வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக தனது கிறிஸ்துமஸ் உரையில், அதிபராக பதவி ஏற்றதும், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என கூறினார்.