டொனால்ட் டிரம்பிற்கு ரூ.42 கோடி அபராதம் - பாலியல் வழக்கால் வந்த சிக்கல்
டொனால்ட் டிரம்பிற்கு 5 மில்லியன் அபராதம் விதித்துள்ளது ஃபெடரல் நீதிமன்றம்.
டொனால்ட் டிரம்ப்
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் 1990 களில், நியூயார்க் டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் அறையில் வைத்து டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பத்திரிகையாளரும் எழுத்தாளருமான இ. ஜீன் கரோல் குற்றஞ்சாட்டியிருந்தார்.
பாலியல் வழக்கு
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப், வழக்கு விசாரணைக்கு ஆஜராக மறுத்தார். இந்த வழக்கில், டிரம்ப்பால் பாலியல் ரீதியான தொல்லைக்கு ஆளான மற்ற பெண்களின் சாட்சியங்கள் மற்றும் பெண்கள் குறித்து டிரம்ப் தவறாக பேசுவது தொடர்பான டேப்பும் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாலியல் துன்புறுத்தலுக்காக 2.02 மில்லியன் டாலர், அவதூறான சமூக வலைதள பதிவிற்காக 2.98 மில்லிடன் டாலர் ஆக மொத்தம் டிரம்பிற்கு 5 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.42 கோடி) அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரி, டிரம்ப் ஃபெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
தீர்ப்பை ரத்து செய்ய மறுத்த ஃபெடரல் நீதிமன்றம் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்து வரும் நிலையில் ஜனவரி 20 ஆம் தேதி அதிபராக பதவியேற்ற பின்னர் இந்த வழக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.