டிரம்ப் அரசின் முக்கிய பதவியில் தமிழ்நாட்டு இளைஞர் - யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?
ஸ்ரீராம் கிருஷ்ணனை வெள்ளை மாளிகை ஏஐ பிரிவின் மூத்த கொள்கை ஆலோசகராக டிரம்ப் நியமித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப்
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47வது அதிபராக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் டிரம்ப் அமைச்சரவை மற்றும் அரசுத் துறைகளை கட்டமைத்து வருகிறார். அந்த வகையில் புதிதாக அரசாங்க செயல்திறன் துறையை(DOGE) உருவாக்கி எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமியை அதன் தலைமை பொறுப்பில் நியமித்தார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன்
தற்போது, வெள்ளை மாளிகையின் அறிவியல் தொழில்நுட்ப கொள்கை துறையினுடைய ஏஐ பிரிவின் மூத்த கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்துள்ளார்.
🇺🇸 I'm honored to be able to serve our country and ensure continued American leadership in AI working closely with @DavidSacks.
— Sriram Krishnan (@sriramk) December 22, 2024
Thank you @realDonaldTrump for this opportunity. pic.twitter.com/kw1n0IKK2a
சென்னை பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் பி.டெக் பட்டம்(2001-2005) பெற்றார்.
அதனையடுத்து மைக்ரோசாப்ட், பேஸ்புக், ஸ்னாப்சேட்(Snapchat), டிவிட்டர் ஆகிய முன்னணி நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார். எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிய பிறகு அதன் மறுகட்டமைப்பில் ஸ்ரீராம் கிருஷ்ணன் முக்கிய பங்கு வகித்தார்.