அம்பானியின் மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Marriage Mumbai
By Sumathi Dec 30, 2022 10:41 AM GMT
Report

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ராதிகா மெர்ச்சன்ட் 

ஆனந்த் அம்பானி சிறுவயதிலிருந்தே ராதிகா மெர்ச்சண்டுடன் பழகி வருகிறார். இவர், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் உரிமையாளர் விரன் மெர்ச்சன்ட் மற்றும் சைலா மெர்ச்சண்ட் தம்பதிகளின் மகள் ஆவார். மும்பையில் உள்ள புகழ்பெற்ற கதீட்ரல், ஜான் கானான் பள்ளி மற்றும் எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.

அம்பானியின் மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா? | Who Is Anant Ambani Fiancee Radhika Merchant

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு ராதிகா ஹாலிடே ஹோம் டெவலப்பர் நிறுவனமான Isprava Groupல் 2017ல் சேர்ந்தார்.

பரதத்தில் ஆர்வம்

தற்போது என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குநராக பணியாற்றுகிறார். பரத நாட்டியத்தின்மீது தீராத ஆர்வம் கொண்ட ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக குரு பாவனா என்பவரிடம் பயிற்சி எடுத்தார்.

அம்பானியின் மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா? | Who Is Anant Ambani Fiancee Radhika Merchant

அரங்கேற்றம் கடந்த ஜூன் மாதம் மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ வேல்டு சென்டரில் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. அதுமட்டுமன்றி மலையேற்றம், நீச்சல் போன்றவற்றிலும் அவருக்கு ஆர்வம் உண்டு.