இளைய மகனை களமிறங்கும் முகேஷ் அம்பானி... எதில் தெரியுமா?

Mukesh Ambani Anand ambani
By Petchi Avudaiappan Jul 06, 2021 05:32 PM GMT
Report

ரிலையன்ஸ் குழுமத்தின் இரண்டு நிறுவனங்களுக்கு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி என இரண்டு நிறுவனங்களுக்கு அவர் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த 3 ஆண்டுகளில் நியூ எனர்ஜி தொழிலில் சுமார் 75000 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதனை முகேஷ் அம்பானி உறுதியும் செய்துள்ளார். அது சார்ந்த உற்பத்தி பணிகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னெடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.