உலகை மிரட்டும் குரங்கு அம்மை : எசசரிக்கை கொடுத்த WHO

World Health Organization ‎Monkeypox virus
By Irumporai Jun 26, 2022 07:00 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

குரங்கு அம்மை நோய் உலக சுகாதார அவசர நிலையை இன்னும் அடையவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958ம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

மனிதருக்கு பரவத்தொடங்கிய குரங்கு அம்மை

இந்த நோய் பின்னாலில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970 ம் ஆண்டு தான் முதன் முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

உலகை மிரட்டும் குரங்கு அம்மை : எசசரிக்கை கொடுத்த WHO | Who Explain About Monkeypox Virus

வழக்கமாக மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோயாகிய இந்த குரங்கு அம்மை நோய், ஐரோப்பிய நாடுகளமற்றும்வடஅமெரிக்காவில்பரவி வருவதன் காரணம் குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டது.

சமூகப்பரவலாக மாறிய குரங்கம்மை

குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல என்றாலும், சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்றும், எனவே இதனை கருத்தில் கொண்டு உலக நாடுகள் உடனடியாக எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.

உலகை மிரட்டும் குரங்கு அம்மை : எசசரிக்கை கொடுத்த WHO | Who Explain About Monkeypox Virus

இதுவரை பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இந்திய அணியின் வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - ரிஷப் பண்ட்