இந்திய அணியின் வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - ரிஷப் பண்ட்

Rishabh Pant Indian Cricket Team
1 மாதம் முன்

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான நான்காவது டி.20 போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா வெற்றி 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 2 போட்டியிலும், இந்திய அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டி.20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 55 ரன்களும், ஹர்திக் பாண்டியா 46 ரன்களும் எடுத்தனர். இதன்பின் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறினர்.

இந்திய அணியின் வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - ரிஷப் பண்ட் | They Are The Reason For The Success

டி காக் (14), வாண்டர் டூசன் (20) மற்றும் மார்கோ ஜென்சன் (12) ஆகிய மூன்று வீரர்களை தவிர மற்றவர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 16.5 ஓவரில் வெறும் 87 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த தென் ஆப்ரிக்கா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

ரிஷப் பண்ட் பெருமிதம் 

இந்த வெற்றி குறித்து பேசிய ரிஷப் பண்ட் “திட்டத்தை சரியாக செயல்படுத்தினால் வெற்றி கிடைக்கும் என்பதை நாங்கள் பேசி கொண்டே இருந்தோம், அதற்கான பலன் இந்த போட்டியில் கிடைத்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - ரிஷப் பண்ட் | They Are The Reason For The Success

எதிரணி எந்த அணியாக இருந்தாலும் சிறப்பாக விளையாடினால் கிரிக்கெட்டில் வெற்றி கிடைக்கும். அடுத்த போட்டியிலாவது டாஸில் வெற்றி பெற முடியுமா என்பதை பார்ப்போம்.

ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக்கின் பொறுப்பான ஆட்டமே இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இக்கட்டான சூழ்நிலையில் இருவரும் மிக சிறப்பாக விளையாடினர். எனது தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறேன்.

தவறுகளை திருத்தி கொண்டு பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் வெற்றிக்காக 100 சதவீதம் போராடுவோம்” என்று தெரிவித்தார். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.